ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிபர் ஜோ பைடன்

0 2659
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக சீன அதிபர் சி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார்.

அமெரிக்க மக்களின் பாதுகாப்பு, பொருளாதாரம், சுகாதாரத்தை ஒரு போதும் சமரசம் செய்ய முடியாது என்று சீனாவிடம் திட்டவட்டமாக தெரிவித்த ஜோ பைடன் இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் சீனா தனது அதிகாரத்தை நீக்கி சுதந்திரமான வர்த்தகத்திற்கு வகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொரோனா பரவுவதைத் தடுப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களையும் இரு தலைவர்களும் பேசியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments