இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்துச் சிதறியது... தீக்குழம்பை வெளியேற்றுவதால் மக்கள் வெளியேற்றம்
இத்தாலியில் உள்ள Mount Etna எரிமலை பயங்கர தீப்பிழம்புகளுடன் வெடித்து சிதறியது.
Sicily தீவில் அமைந்துள்ள இந்த எரிமலை 3 ஆயிரத்து 330 அடி உயரம் கொண்டதாகும். இந்த எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. மேலும் எரிமலையில் இருந்து வெளியேறிய தீப்பிழம்புகள் சாலைகளில் வெள்ளம் போல் பாய்ந்து ஓடியது.
ஐரோப்பாவின் மிக உயர்ந்த எரிமலை இதுவாகும். இது ஆண்டுக்கு பல முறை வெடித்து சிதறுகின்றன. கடைசியாக 1992ஆம் ஆண்டு பயங்கரமாக வெடித்து சிதறியது.
Comments