லடாக் எல்லையில் விறுவிறுப்பாக நடைபெறும் படைக்குறைப்பு நடவடிக்கைகள்
லடாக் எல்லையின் பான்காங் ஏரிப்பகுதி மற்றும் ஃபிங்கர் 4 மலைப்பகுதியில் இருந்து சீனப்படைகள் விலககிக் கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 150 பீரங்கிகளும் 5 ஆயிரம் வீரர்களும் திரும்ப அழைக்கப்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மிகப்பெரிய அளவில் படைக்குறைப்பு நடவடிக்கைகள் எல்லையில் நடைபெற்று வருகின்றன.
ராணுவ தளபதிகள் மட்டத்திலான ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து எல்லையில் இருந்து சீனா 230 பீரங்கிகளைத் திரும்பப்பெறும் நடவடிக்கையை மேற்கொண்டது.இரண்டு நீண்ட வரிசைகளில் இந்திய நிலைகளை விட்டு 500 மீட்டர் தூரத்தில் இந்த பீரங்கிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
Comments