நான்காம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

0 2466
நான்காம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் 4-ம் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார். 

இன்று மதியம் 1 மணிக்கு மதுரை ஒத்தகடை யானை மலையிலும், நாளை காலை 8 மணிக்கு தேனி மாவட்டம் கோகிலாபுரம் விலக்கு பகுதியிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.

19-ந் தேதி காலை 8 மணிக்கு, கோவை மாவட்டம் சிங்காநல்லூரிலும், மதியம் 1 மணிக்கு காரமடை அருகேயும், 20-ந் தேதி காலை 8 மணிக்கு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியிலும், மதியம் 1 மணிக்கு தாராபுரத்திலும், 21-ந் தேதி காலை 8 மணிக்கு திருப்பூர் ராக்கிபாளையம் பிரிவு காங்கேயம் சாலையிலும், மதியம் 1 மணிக்கு பெருந்துறையிலும், 22-ந் தேதி காலை 8 மணிக்கு அந்தியூரிலும், மதியம் 1 மணிக்கு மேட்டூர் ஓலைப்பட்டியிலும் பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments