80 சதவீத வாகன ஓட்டிகள் பாஸ்டேக் முறைக்கு மாறிவிட்டனர்: தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல்
80 சதவீத வாகன ஓட்டிகள் ‘பாஸ்டேக்’ நடைமுறைக்கு மாறிவிட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 570 சுங்கச்சாவடிகளையும் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், வாடகை கார்கள் உள்ளிட்ட 80 சதவீதம் வாகன ஓட்டிகள் ‘பாஸ்டேக்’ முறைக்கு மாறிவிட்டனர்.
சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக் ஸ்டிக்கர்’ விற்பனைக்கு தனியாக சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சுங்கச்சாவடிகளை சுற்றி 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் தங்களுடைய சொந்த கார்களுக்கு மாதம் 275 ரூபாய் செலுத்தி மாதாந்திர சலுகை அட்டை பெற்றுக்கொண்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Comments