பாத்திர வியாபாரி முருகேசன் பாட்டுக்கு பச்சை கிளி அடிமையப்பா..! கற்பகமே உனையன்றி…..
ஈஸ்வரர் கோவிலில் அம்மனை புகழ்ந்து பாடல் பாடிய பாத்திர வியாபாரியின் பாடலை கேட்டு பச்சைக்கிளி ஒன்று அவர் அருகில் நின்று ரசித்த சுவாரஸ்ய சம்பவம் திருப்பூர் அருகே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில், சர்கார பெரிய பாளையத்தில் பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சாமி கும்பிட வரும் பாத்திர வியாபாரி முருகேசன் என்பவர் கோவிலில் அமர்ந்து அம்மன் பக்தி பாடல்களை பாடுவது வழக்கம்..!
கற்பகமே உனையன்றி துணையாரம்மா என்று மனம் உருகி முருகேசன் படிக் கொண்டிருக்க, எங்கிருந்தோ பறந்து வந்து புல் வெளியில் அமர்ந்த பச்சைக்கிளி ஒன்று மெல்ல நடந்து முருகேசனின் அருகில் வந்து நின்றது
முருகேசன் தனது பாடலை நிறுத்தாமல் பாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து ஒருவர் வீடியோ எடுத்த நிலையிலும் அந்த கிளி எந்த ஒரு அச்ச உணர்வும் இல்லாமல் முருகேசன் அருகில் நின்றது.
முருகேசனின் பாடலுக்கு அடிமையான பச்சைக்கிளி அவரது பாடலை ரசித்து கேட்பதாக இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முருகேசன் பாடுவதை கண்டு அருகில் வந்து கிளி நின்றதை ஒரு தரப்பினர் அதிசயமாக பார்த்து வரும் நிலையில் மற்றொரு தரப்பினர் அது ஏன் முருகேசனின் வளர்ப்பு கிளியாக இருக்க கூடாது ? என்று கேள்வி எழுப்பினர். விசாரித்த போது அந்த கிளிக்கும் முருகேசனுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரியவந்தது.
வாழ்வில் எதேச்சையாக நடக்கும் சில நிகழ்வுகள் கூட சில நேரங்களில் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தி விடும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கின்றது இந்த சம்பவம்.
Comments