தமிழ்நாட்டிற்கான புதிய சாலை திட்டங்கள் - மத்தியமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

0 2838
சென்னை-பெங்களூர் இடையேயான, புதிய பசுமைவழிச் எக்ஸ்பிரஸ் சாலை திட்டங்கள் அமைந்தால், வெறும் 3 மணி நேரத்திற்குள்ளாக, பயண இலக்கை அடைய முடியும் என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கட்கரி இதனைக் கூறியுள்ளார்.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே, ஈரடுக்கு மேம்பால வடிவில், பறக்கும் சாலை திட்டம் முன்னெடுக்கப்படும் என்றார்.

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம், உச்சநீதிமன்ற வழக்குகள் முடிந்தவுடன், விவசாயிகள், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் என்றும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments