படைகளை வேகமாக வாபஸ் பெறுகிறது சீனா.. படகுத்துறை, ஹெலிகாப்டர் இறங்கு தளம் அகற்றம்

0 4593
லடாக் எல்லையில் படகுதுறை மற்றும் ஹெலிகாப்டர் இறங்குதளத்தை சீனா அகற்றி உள்ளது.

லடாக் எல்லையில் படகுதுறை மற்றும் ஹெலிகாப்டர் இறங்குதளத்தை சீனா அகற்றி உள்ளது.

கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ ஏரியின் வடக்கு கரையில் உள்ள 4 ஆம் மலை முகடு வரை இந்திய படைகள் பின் வாங்கி வரும் பணியை தொடங்கி உள்ளன.

இதே போல எட்டாம் மலை முகடு வரை பின் வாங்கும் நடவடிக்கையில் சீன படைகள் ஈடுபட்டுள்ளன. இத்ன ஒரு கட்டமாக 6 மற்றும் 7 மலை முகடுக்கு இடையில் சீன அமைத்திருந்த படகுத்துறை, ஹெலிகாப்டர் இறங்குதளம் ஆகியவற்றை அந்நாட்டு ராணுவம் அகற்றி உள்ளது.

மேலும் 125 கூடாரங்களை அமைந்திருந்த அதில் 120-யை அகற்றி உள்ளது. இப்போது அங்கு 5 கூடாரங்கள் மட்டுமே உள்ளதை இந்திய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.சீன பீரங்கிகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments