பெருவில் பதவியேற்ற 24 மணி நேரத்தில் ஊழலில் சிக்கி பதவி விலகிய அமைச்சர்
பெருவில் பதவியேற்ற 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஊழலில் சிக்கி அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எலிசபெத் அஸ்பெட் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சீனாவிலிருந்து சினோஃபார்ம் தடுப்பூசியை வாங்கிய பெரு, கடந்த 7 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கியது. இந்நிலையில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே அந்நாட்டு அரசியல் தலைவர்கள் சிலர் ரகசியமாக தடுப்பூசி போட்டுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து பெருவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எலிசபெத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பெருவில் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கி ஒரே ஆண்டில் சுமார் 6 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
Comments