அண்ணா பல்கலை. எம்.டெக் படிப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் யோசனை
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையையும், அடுத்தாண்டு முதல் மத்திய அரசு இடஒதுக்கீடு முறையையும் பின்பற்றலாம் என உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகளுக்கு இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அறிவித்ததை எதிர்த்து 2 மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு எம்.டெக் படிப்பில் இருந்து இடஒதுக்கீடு பிரச்சனைக்கு திசை மாறி செல்வதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை 69% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாதா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்தாண்டு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைகழகமே நடத்தும் நிலையில், மத்திய அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டால் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
Comments