2025 ஆம் ஆண்டு முதல் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும் - ஜாகுவார்
2025 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து கார்களும் எலக்ட்ரிக் கார்களாக இருக்கும் என ஜாகுவார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாட்டா மோட்டர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஜாகுவார், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுக்கு இரண்டரை பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்யவுள்ளது.
ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவர் பிராண்டுகளில் பல எலக்ட்ரிக் கார் மாடல்கள் 2030-ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தவும் ஜாகுவார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கார்பன் உமிழ்வைக் குறைக்கவே எலக்ட்ரிக் கார் தயாரிப்பு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக ஜாகுவார் நிறுவன தலைமை நிர்வாகி தியரி பொல்லோரே தெரிவித்துள்ளார்.
Comments