ஃபாஸ்டேக் கட்டாயம் - காலநீட்டிப்பு கிடையாது.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் உட்பட, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ள சாலை திட்டங்கள் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என, மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு சிஎல்ஆர்ஐ வளாக நிகழ்ச்சிக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை - பெங்களூரு இடையே புதிய பசுமைவழிச்சாலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும், இவற்றிற்கு, பிரதமர் நரேந்திர மோடி, விரைவில் அடிக்கல் நாட்டுவார் என்றார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, மாற்று எரிபொருளை பயன்படுத்த அனைவரும், முன்வர வேண்டும் என நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார்.
Comments