மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 39 பேர் பலி
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 54 பயணிகளுடன் சென்ற பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்தனர்.
அந்த மாநிலத்தின் சித்தி நகரில் இருந்து சத்னா நகரை நோக்கி 54 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றது. பாட்னா கிராமத்திற்கு அருகே சென்ற போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த பெரிய
கால்வாய்க்குள் கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர், கால்வாயில் இருந்து 7 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 39 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள பிரதமர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுமென அறிவித்துள்ளார்.
Comments