5ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை... பீகார் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

0 6064
5ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை... பீகார் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பீகாரில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி முதல்வருக்கு மரண தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவின் புல்வாரி ஷெரீப் பகுதியிலுள்ள பள்ளியில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரங்கேறியுள்ளது இந்த கொடூர சம்பவம். பள்ளிக்கு வந்த 5 ஆம் வகுப்பு மாணவியை, மிரட்டி, பள்ளி முதல்வர் அரவிந்த் குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ், கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் அரவிந்த்குமாருக்கு மரண தண்டனையும், குற்றத்திற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் அபிஷேக் குமாருக்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments