டெல்லியில் 83 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் : சொந்த கிராமங்களுக்கு திரும்பிய பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகள்
டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தும் விவசாயிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பி விட்டதால், குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள் மட்டுமே போராட்ட களத்தில் உள்ளனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 83 ஆவது நாளாக தொடர்கிறது. அரசுடன் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில்
போராட்டம் மேலும் பல நாட்கள் நீடிக்கும் என்பதால் சொந்த ஊர்களுக்கு விவசாயிகள் திரும்பியுள்ளனர்.
Comments