நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கு : நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி
நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதியான இவர் நீதிபதிகள், அவர்களது குடும்பப் பெண்கள், பெண் வழக்கறிஞர்கள், உள்ளிட்டோரை அவதூறாக பேசி பல வீடியோக்களை வெளியிட்ட வழக்கில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக இவரது ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி வி.பாரதிதாசன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Comments