சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை அமைக்கும் பணி : 17,000 மரங்களை வெட்ட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்
சென்னை, பெங்களூரு விரைவுச் சாலை அமைப்பதற்கு 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, பெங்களூரு விரைவுச் சாலை திட்டத்திற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் சாலை அமைப்பதற்கு 5 புள்ளி 4 ஹெக்டர் நிலத்தில் உள்ள 17 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் மகிமண்டலம் வன பகுதியில் உள்ள 2 ஆயிரம் மரங்கள் பாதிக்கப்படலாம் என்றும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள 26-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Comments