வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் BPL ரேசன் அட்டைகளை ஒப்படைக்க நடுத்தர மக்களுக்கு கர்நாடக அரசு உத்தரவு
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் BPL ரேசன் அட்டைகளை ஒப்படைக்குமாறு நடுத்தர மக்களுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இருசக்கர வாகனம், பிரிட்ஜ், டிவி, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போர் ரேசன் கார்டுகளை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்துள்ளார்.
பெல்காமில் செய்தியாளர்களிடையே பேசிய கர்நாடக அமைச்சர் மார்ச் 31ம் தேதிக்குள் ரேசன் அட்டைகளை சமர்ப்பிக்காதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கர்நாடக அரசின் இந்த அறிவிப்பைக் கண்டித்து பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் ரேசன் கடைகள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Comments