பான்காங் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயுதங்களுடன் படைகளை விலக்கிக் கொள்ளும் சீனா
லடாக் எல்லையில் இருந்து பான்காங் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சீனா தனது படைகளை விலக்கிக் கொண்டு வருகிறது.
தற்பொழுது ஃபிங்கர் 4 முதல் 8 வரையிலான பகுதிகளில் படைக்குறைப்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் படைகள் விலகிவிடும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி படைகளைத் திரும்பப் பெற சீனா ஒப்புக் கொண்டது.
இந்தியாவும் பிங்கர் 8 பகுதியில் உள்ள முன்களப் படைகளைத் திரும்பப் பெற்று வருகிறது.
முழுவதுமாகப் படைவிலக்கும் நடவடிக்கைகள் முடிந்த பிறகு 48 மணி நேரத்திற்குள் இருநாட்டு உயர் அதிகாரிகளுக்கு இடையிலான 10வது சுற்றுப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும் என்றும் ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments