உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக ஒகோஞ்சோ இவேலா பதவியேற்பு
உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நிகோசி ஒகோஞ்சோ இவேலா பதவியேற்றுள்ளார்.
இதன் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
164 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலக வர்த்தக அமைப்பு, உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்பான விதிகளை முடிவு செய்கிறது.
அதன் தலைவராக இவேலா பதவியேற்றதை அடுத்து வெளியிட்ட செய்தியில், கொரோனா தொற்று பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்தபோது, இவேலாவின் நியமனத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.
இதனையடுத்து, புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை அடுத்து இவேலாவுக்கு இருந்த தடை நீங்கி, அவரது நியமனத்துக்கு பைடன் ஒப்புதல் அளித்தார்.
Comments