சென்னை கிரிக்கெட் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்... 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறி கொடுத்தது

0 2714

ந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

இரு அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களும் இங்கிலாந்து 134 ரன்களும் எடுத்தது.

இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை எடுத்தது. தமிழக வீரர் அஸ்வின் அபாரமாக விளையாடி 106 ரன்கள் குவித்தார். கேப்டன் விராட் கோலி 62 ரன்கள் எடுத்தார்.

482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை விளையாடத் தொடங்கியது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. அக் ஷர் படேல் 2 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments