பாகிஸ்தானில் மீண்டும் இம்ரான் கான் ஆட்சி வேண்டாம்: மரியம் நவாஸ் பொதுமக்களுக்கு வலியுறுத்தல்
பாகிஸ்தானில் மீண்டும் இம்ரான் கான் ஆட்சி அமைக்க பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது என்று நவாஸ் செரீப் மகளும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் துணை தலைவருமான மரியம் நவாஸ் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் மின்சாரம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதற்கு பிரதமர் இம்ரான் கான் தான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இயற்கை எரிவாயுவை அதிக விலைக்கு இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், இம்ரான் கானுக்கு நிதியுதவி அளிப்பதால் அவர் அதை கண்டு கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இம்ரான் கானின் ஆட்சியால் நாட்டின் வளர்ச்சி மிகவும் தேய்ந்துவிட்டதாகவும், மக்கள் மீண்டும் இந்த தவறை செய்ய வேண்டாம் என்றும் மரியம் நவாஸ் மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.
Comments