பீகார் மாநிலத்தில் சில இடங்களில் லேசான நிலநடுக்கம்... வீடுகளில் உணரப்பட்டதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்

0 1227

பீகாரில் நேற்றிரவு மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் பாட்னாவில் நேற்றிரவு 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

ரிக்டர் அளவு கோலில் 3 புள்ளி 5 ஆக பதிவான இது சுமார் 5 விநாடிகளுக்கு நீடித்ததாகக் கூறப்படுகிறது. நாலந்தாவில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக திங்கள்கிழமை மாலை, ரிக்டர் அளவில் 4 புள்ளி 1 என்ற அளவில் நிலநடுக்கம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும் உணரப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments