24 ஆண்டுகளாகப் புதுப்பித்தும் பயன் இல்லை.... வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு சர்ச்சை பேனர் - புதுக்கோட்டையில் பரபரப்பு!

0 12607

புதுக்கோட்டை மாவட்டத்தில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு 24 ஆண்டுகளாக வேலை கிடைக்காத இளைஞர் ஒருவர்,  தனது நண்பர்களுடன் இணைந்து நூதனமான முறையில் பிளக்ஸ் பேனர் வைத்தது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காகக் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தராஜ் என்பவர் பதிவு செய்துவிட்டு, வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், இதுவரை அவருக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் எந்த வேலையும் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு, இருபத்தி நான்காவது ஆண்டாகத் தனது பதிவை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்று புதுப்பித்துள்ளார் ஆனந்தராஜ்.

தனக்கு வேலை கிடைக்காத விரக்தியில் நூதனமான முறையில் அந்தக் குறும்புக்கார இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு முன்பாக ப்ளக்ஸ் பேனர் வைத்தார். அந்த பிளக்ஸ் பேனரில் 24 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனது பதிவை புதுப்பித்து உள்ள நண்பர் ஆனந்தராஜ்க்கு வாழ்த்துக்கள் என்றும் இதுநாள் வரை அவரை நலம் விசாரித்துக் கூட  ஒரு கடிதம் கூட வரவில்லை என்ற வாசகங்களுடன் வேலை வாய்ப்பு பதிவு எண்ணையும் அந்த பேனரில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனந்தராஜ் வைத்த பிளக்ஸ் பேனர் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகியுள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் பலரும் அந்த ப்ளக்ஸ் பேனரை பகிர்ந்து வருகிறார்கள். வேலை வாய்ப்பு அலுவலகம் முன்பே ப்ளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்த திருக்கோகர்ணம் காவல்துறையினர் மற்றும் வேலைவாய்ப்பு துறையினர் உடனடியாக அந்த ப்ளக்ஸ் பேனரை அகற்றினர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments