கிராமப்புற நலிவடைந்த இளைஞர்களின் சுய முன்னேற்றத்துக்கு உதவ முன் வரவேண்டும் - நடிகர் சோனுசூட் வேண்டுகோள்

0 1789
கிராமப்புற நலிவடைந்த இளைஞர்களின் சுய முன்னேற்றத்துக்கு உதவ முன் வரவேண்டும் - நடிகர் சோனுசூட் வேண்டுகோள்

கிராமப்புற நலிவடைந்த இளைஞர்களின் சுயமுன்னேற்றத்துக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என நடிகர் சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிராமப்புற இளைஞர்களுக்காக முதலீடே இல்லாமல் தொழில் தொடங்கும் திட்டத்தை ஸ்பைஸ் மணி என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது, பணப் பரிமாற்றம், பேன் கார்டு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த ஸ்பைஸ் மணி நிறுவனம் வழங்கி வருகிறது.

கொரோனா ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நடிகர் சோனு சூட், இந்த நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.

நலிவடைந்த கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வருவாய் ஈட்ட வழிவகை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments