மியான்மர் நாட்டில் ராணுவத்திற்கு எதிராக வலுக்கிறது போராட்டம்
மியான்மார் நாட்டில் ராணுவத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டங்களை அடுத்து முக்கிய நகரங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தின் கவச வாகனங்கள் பல ஊர்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள மூத்த தலைவர் ஆங்சான் சூகியின் காவலை 17 ஆம் தேதி வரை நீதிமன்றம் நீடித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மியான்மரில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் மியான்மரில் உள்ள தங்கள் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
Comments