சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படையில் முக்கிய பணியாற்றிய பொல்லானுக்கு மணிமண்டபம் கட்டப்படும் - முதலமைச்சர்

0 2195
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படையில் முக்கிய பணியாற்றிய பொல்லானுக்கு மணிமண்டபம் கட்டப்படும் - முதலமைச்சர்

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையிடம் படையில் பணியாற்றிய பொல்லானுக்கு முழுஉருவ சிலையுடன் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வளையக்காரனுரில் நடைபெற்ற அருந்ததியர் ஆதரவு மாநாட்டில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

பொல்லான் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

வீடு இல்லாத ஆதிதிராவிடர் அனைவருக்கும் வீடுகள் வழங்கபடும் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, குமாரபாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments