தனது சிறுநீரகத்தை ஆதரவற்ற ஒருவருக்கு தானமாக அளித்த பெண்ணுக்கு பிரதமர் மோடி பாராட்டு

0 3235

தரவற்ற நபருக்கு தனது சிறுநீரகத்தை தானமாக அளித்த கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் உறுப்பு தானம் தொடர்பான பேச்சால் கவரப்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த மனாஷி ஹால்டர் என்ற பெண், தனது ஒரு சிறுநீரகத்தை ஆதரவற்ற ஒருவருக்கு தானமாக அளித்தார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு அது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதற்கு பதில் எழுதி உள்ள பிரதமர் மோடி, ஒரு உயிரை காப்பாற்ற உறுப்பு தானம் செய்த தங்களின் செயல் மிகவும் கவர்ந்ததாகவும்,தன்னலமற்ற செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments