நடிகை சித்ரா வழக்கில், கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்

0 2677

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்தனர்.

ஜாமீன் கோரி ஹேம்நாத் தாக்கல் செய்த மனு, நீதிபதி பாரதிதாசன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கில் 60 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததை கருத்தில் கொண்டு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments