முன்களப் பணியாளர்களில் 80-85 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

0 1116

முன்களப் பணியாளர்களில் 80 முதல் 85 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றார். இந்தியாவில் 188 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றாலும், வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஹர்ஷ்வர்தன் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments