கிழக்கு லடாக் எல்லையில், பாங்காங்சோ ஏரியின் கரைகளில் படை விலக்க நடவடிக்கைகள் விறுவிறுப்பு
கிழக்கு லடாக் எல்லையில், பாங்காங்சோ ஏரியின் இரு கரைகளிலும் படை விலக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், சில இடங்களில் திட்டமிட்டதைவிட முன்கூட்டியே முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா-சீனா ராணுவங்களிடையே ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், முதல் கட்ட படை விலக்கப் பணிகளை, வரும் 20ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எழுத்துபூர்வமாக எட்டப்பட்டுள்ள இந்த படை விலக்க உடன்பாட்டின்படி, களத்தில் நேரடியாகவும் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றின் மூலமும், எலெக்ட்ரானிக் முறைகளிலான கண்காணிப்பின் அடிப்படையிலும் படைவிலக்கம் படிப்படியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது முடிவடைந்தவுடன், இந்தியா-சீனா ராணுவ உயரதிகாரிகளிடேயே 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தெப்சாங் சமவெளி, கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் (Gogra and Hot Springs) பகுதிகள் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
Comments