எதிரி நாடுகளை அதிர வைக்கும் அஸ்திரா ஏவுகணை..ஒலியை விட 4 மடங்கு வேகத்தில் பாய்ந்து தாக்கி அழிக்கும்..!
ஒலியை விட நான்கு மடங்கு வேகத்தில் பறந்து சென்று தாக்கும் ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பரிசோதிக்க உள்ளது.
100 கிலோ மீட்டர் இலக்கை தாக்கும் திறன் கொண்ட அஸ்த்ரா ஏவுகணையின் தாக்கும் திறனை 160 கிலோ மீட்டராக அதிகரிக்க திட்டமிட்டுள்ள டி.ஆர்.டி.ஓ, இதற்காக பரிசோதனையை அடுத்த சில மாதங்களில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தயாரிப்பில் உள்ள அஸ்தரா ஏவுகணை மணிக்கு 5557 கி.மீ. வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது.
விண்ணில் இருந்து விண் இலக்கை தாக்கும் இந்த ஏவுகணை, 160 கிலோ மீட்டர் தூர இலக்கை தூளாக்கும் வல்லமை கொண்டது. இதனை அடுத்த ஆண்டு விமானப்படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து விலை அதிகமுள்ள ஏவுகணைகளை இறக்குமதி செய்வது குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments