சீர்காழி இரட்டை கொலை வழக்கில், என்கவுண்டர் நடைபெற்ற இடம்: சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று விசாரணை
சீர்காழியில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று விசாரணையை தொடங்கினர்.
சீர்காழியில் கடந்த மாதம் 27ம் தேதி தன்ராஜ் என்பவரின் வீட்டில் புகுந்த வடமாநில கொள்ளையர்கள், அவரது மனைவி மற்றும் மகனை கொலை செய்து விட்டு, வீட்டில் இருந்த 12.5 கிலோ நகைகளை திருடிச் சென்றனர். இதனை அடுத்து கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களில் மஹிபால் என்பவன் காவல்துறையினரை தாக்கியதாகக் கூறி போலீசாரால் சுட்டுக்கொலப்பட்டார். இந்த என்கவுண்டர் வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், சீர்காழி அருகே எருக்கூர் கிராமத்தில் என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரனையை தொடங்கி உள்ளனர். என்கவுண்டர் செய்த பொறையாறு காவல் ஆய்வாளர் செல்வத்திடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
Comments