"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஃபாஸ்டேக் முறையை முழுமையாக அமல்படுத்துவதற்கான அவகாசம் இனி நீட்டிக்கப்படாது: அமைச்சர் நிதின் கட்கரி
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறையை முழுமையாக அமல்படுத்துவதற்கான அவகாசம் இனி நீட்டிக்கப்படாது என்பதால், வாகன உரிமையாளர்கள் ஃபாஸ்டேக் முறைக்கு உடனே மாறிக்கொள்ளுமாறு மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
சுங்கச்சாவடிகளின் அனைத்து வழிகளும், இன்று நள்ளிரவு முதல், பாஸ்டேக் வழிகளாக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. எனவே, பாஸ்டேக் இல்லாமல் அல்லது இயங்காத, செல்லாத பாஸ்டேக் உடன் வரும் வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அவகாசம் ஏற்கெனவே பல முறை நீட்டிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி அவகாசம் நீட்டிக்கப்படாது என்பதால், வாகன உரிமையாளர்கள் உடனடியாக ஃபாஸ்டேக் முறைக்கு மாறுமாறு அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
Comments