முதன்முறையாக 52 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஐந்நூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முதன்முறையாக 52 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது. பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூன்றாம் காலாண்டில் லாபம் ஈட்டியுள்ளன.
பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படாததுடன் பல துறைகளில் வெளிநாட்டு முதலீட்டு உச்சவரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றமடைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 525 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 69 ஆக இருந்தது.
பங்குச்சந்தை வரலாற்றிலேயே சென்செக்ஸ் முதன்முறையாக 52 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 139 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 302 ஆக இருந்தது. தனியார் வங்கிகளின் பங்கு விலை இரண்டு விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
Comments
very nice