காதலர் தினத்தன்று போலீசார் முன்னிலையில் நடைபெற்ற நக்சலைட்டுகள் திருமணம்...
வடமாநில போலீசாருக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது அப்பகுதிகளில் உள்ள நக்சலைட்டுகள் நடமாட்டம் தான். இதனைச் சமாளிக்க, போலீசார் பல்வேறு முயற்சிகளைக் கையாண்டு வருகின்றனர். நக்சலைட்டுகளை பிடிக்க உதவுபவர்களுக்கு உரியப் பரிசுத் தொகை வழங்குவது, சரணடையும் நக்சலைட்டுகளுக்கு கவுன்சிலிங் வழங்குவது போன்ற பல நடவடிக்கைகளில் வட மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுகமா பகுதியில், நக்சலைட்டுகளின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், காவல்துறையின் அறிவுரையை ஏற்று, கடந்த 6 மாதங்களாக, ஆயுத போராட்டங்களில் ஈடுபடாமல், போலீசில் சரணடைந்த 15 நக்சலைட்டுகளுக்குகாதலர் தினமான நேற்று,சத்தீஸ்கர் போலீசார் திருமணம் செய்து வைத்தனர்.
ஆட்டம், பாடம் கொண்டாட்டம் என்று மிக விமர்சையாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், உறவினர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்
இதைப் பற்றி காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், திருந்தி வருபவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தால், தேசவிரோத செயல்களில் ஈடுபடாமல், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
Comments