கேரளாவில் கறுப்பு முக கவசம் அணிவதற்கு தடை விதிப்பா? முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம்
கறுப்பு நிற முக கவசம் அணிவதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் கல்லூரி விழா ஒன்றில் பினராயி விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர் கறுப்பு நிற முக கவசம் அணிந்தவாறு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதனைக் கண்ட காவல்துறையினர் உடனடியாக அந்த முக கவசத்தை அகற்றுமாறு வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக பேசிய பினராயி விஜயன் கறுப்பு முக கவசம் அணிவதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்றார். முக கவசம் அணிவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்றும் தெரிவித்தார்.
Comments