காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கல்வீச குழந்தைகளை பயன்படுத்துவோருக்கு கடும் தண்டனை: அமைச்சர் ஜிதேந்திர சிங் எச்சரிக்கை
காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கற்களை வீசுவதற்கு குழந்தைகளைப் பயன்படுத்துவோர் மீது கடும் தண்டனை விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தைகளை கல் வீசுவதற்கு தூண்டுவது குற்றச் செயல் மட்டுமின்றி, மனிதகுலத்திற்கே எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கல் வீசுதல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு குழந்தைகளை பயன்படுத்துவோர் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் ஜிதேந்திர சிங் எச்சரிக்கை விடுத்தார்.
Comments