பிரதமர் மோடிக்கு எதிராக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை ஓவியா மீது புகார்
பிரதமர் மோடிக்கு எதிராக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை ஓவியா மீது, பாஜக வழக்கறிஞர் ஒருவர் சிபிசிஐடி கிரைம் பிரிவில் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து அம்மனுவில், பல்வேறு நலத்திட்ட பணிகளை திறந்து வைக்க தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராக "go back modi" என்ற கருத்தை ட்விட்டரில் நடிகை ஓவியா பதிவிட்டார்.
இப்பதிவு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும், பிரதமரை அவமதிக்கும் வகையிலும் இருப்பதால், அவர் மீது வழக்கு பதிந்து, விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அம்மனுவில் தெரிவித்திருந்தார்.
Comments