மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: இன்று முதல் விநியோகம்

0 2479

சென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பொருட்டு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை பெற்றுள்ளோர் மற்றும் புதிதாக பெற விரும்பும் தகுதிவாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இன்று  முதல் டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான 6 மாதங்களுக்கான டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments