புல்வாமா தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு : வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு முக்கிய தலைவர்கள் புகழஞ்சலி
40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்த புல்வாமா தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள், நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு இதே நாளில், புலவாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் வந்த வாகனங்களின் மீது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதையொட்டி, தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டு, வீர வணக்கம் செலுத்தினர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் காங்கிரஸ்
முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் டுவிட்டர் பதிவு மூலம் வீரர்களை நினைவு கூர்ந்து, கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
Comments