தேமுதிகவை அழைத்து உரிய நேரத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவோம் - அமைச்சர் ஜெயக்குமார்

0 3608

அதிமுக கூட்டணியில் எவ்வித பிரச்னையும் இல்லை எனவும், உரிய நேரத்தில் தேமுதிகவை அழைத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜாஜி சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடியின் வருகை முழுக்க முழுக்க அரசுமுறை பயணமே தவிர இதில் எந்தவித அரசியல் காரணமும் இல்லை என தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் முதலமைச்சர் அகிய இருவரிடையிலான சந்திப்பு குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் பற்றி பேசப்பட்டதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments