விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு

0 2856
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

அச்சங்குளம் கிராமத்தில் இயங்கி வந்த மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஊழியர்கள் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த பலர் சிவகாசி, சாத்தூர், மதுரை என பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூர் ஆமீர்பாளையத்தை சேர்ந்த வனராஜா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments