கடும் பனிப்பொழிவால் வெளியில் செல்ல முடியாத சூழல் : பால்கனியை பார் ஆக்கிய இளம்பெண்
ஜெர்மனியில் ஊரடங்கு மற்றும் கடும் பனிப்பொழிவால் வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இளம் பெண் ஒருவர் தனது பால்கனியிலேயே மினி பார் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
மான்ஸ்டர் (Münster) நகரில் வசிக்கும் இளம்பெண், 9 மணி நேரத்தில் பனிக்கட்டிகளால் சூழப்பட்ட பார் ஒன்றை உருவாக்கியுள்ளார். மண்டை ஓடு வடிவத்தில் பனியை செதுக்கி அதில் பீர் பாட்டிலை அடுக்கிவைத்துள்ளார்.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பால்கனி பார், பார்ப்பதற்கு சிறிய தீவு போல காட்சியளிக்கிறது.
Comments