திமுக ஆட்சி அமைந்ததும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்

0 3772

திமுக ஆட்சி அமைந்ததும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது, மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், திமுக ஆட்சி அமைந்ததும் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனக் கூறினார்.

மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக, பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments