புல்வாமா தீவிரவாத தாக்குதல் 2 ஆம் நினைவு தினம்: அமித் ஷா உள்ளிட்டோர் வீரர்களுக்கு நினைவஞ்சலி
புல்வாமா தாக்குதல் நடந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி அதில் உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நினைவஞ்சலி செலுத்தி உள்ளனர்.
டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமித் ஷா, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தலைவணங்குவதாகவும், அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும் நாடு ஒருபோதும் மறவாது என்றும் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரும் டுவிட்டரில் வீர மரணம் அடைந்த வீரர்களை நினைவு கூர்ந்துள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி,ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வீரர்கள் பயணித்த பேருந்து மீது ஜெய்ஷே முகம்மது தீவிரவாதி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 40பேர் வீரமரணம் அடைந்தனர்.
I bow down to the brave martyrs who lost their lives in the gruesome Pulwama attack on this day in 2019.
India will never forget their exceptional courage and supreme sacrifice.
Comments