ஈரான்-ஆப்கான் எல்லையில் வரிசை கட்டி நின்ற எண்ணெய் லாரிகளில் தீ விபத்து-60 பேர் படுகாயம்
ஈரான்-ஆப்கான் எல்லைப் பகுதியில் பெட்ரோலிய மற்றும் எரிவாயு டேங்கர் லாரிகள் தீப்பிடித்து எரிந்ததில் 60 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஹேரத் நகரின் அருகே உள்ள இஸ்லாம் குவாலா துறைமுகத்தில் வரிசையாக எண்ணெய் சரக்கு லாரிகள் அணிவகுத்து எல்லை தாண்டி செல்ல காத்திருந்தன.
அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் லாரிகள் பற்றியெரிந்தன. இதில் குறைந்தது 60 பேர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்பு வாகனங்களும் ஆம்புலன்சுகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயின் காரணமாக அப்பகுதி எங்கும் கரும் புகை மண்டலம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்த நூற்றுக்கணக்கான எண்ணெய் சரக்கு லாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.
Comments