சென்னை-ஹவுரா ரயிலில் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட இருந்த பெரும் தீவிபத்து ரயில்வே காவலரின் உதவியால் தவிர்ப்பு
சென்னை-ஹவுரா ரயிலில் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட இருந்த பெரும் தீவிபத்து ரயில்வே காவலரின் சமயோசித நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது.
சென்னை- ஹவுரா சிறப்பு விரைவு ரயில் நேற்று ஓடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே சென்று கொண்டிருந்த போது 2-ம் வகுப்பு பொதுப்பெட்டியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு சக்கரம் ஒன்று சூடாகி இருந்ததை ரயிலின் காவலர் கண்டுபிடித்தார். இது குறித்து அவர் அளித்த தகவலின் பேரில் அந்த ரயில் சோம்பேட்டா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த பெட்டி தனியாக பிரிக்கப்பட்ட பின்னர் அதில் பயணம் செய்த 90 பயணிகளும் மற்ற பெட்டிகளில் ஏறி பயணம் செய்தனர்.
பின்னர் புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் மாற்றுப் பெட்டி இணைக்கப்பட்ட பின்னர் அதில் ஏறி அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
Comments