ராகுல் மீது உரிமைமீறல் நோட்டீஸ் அளித்த பாஜக உறுப்பினர்கள்

0 2286

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மாநிலங்களவையில் அனுமதியின்றி அஞ்சலி செலுத்தியதாக ராகுல் மீது பாஜக உறுப்பினர்கள்  உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் 200 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகக் கூறி, அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு ராகுல் கூறியதைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

அவைத் தலைவர் அனுமதி பெறாமல் ராகுல் அஞ்சலி செலுத்தியதாகக் கூறி அவர் மீது 3 பாஜக எம்பிக்கள் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments