உலக அளவில் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள்- உலக வங்கி
உலக அளவில் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தெற்காசியத் துணைத்தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் அளித்துள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் இயங்கும் வாகனங்களில் ஒரு விழுக்காடு இந்தியாவில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரில் 10 விழுக்காடு பேர் இந்தியாவில் உள்ளதாகவும், சாலை விபத்துக்களை 25 விழுக்காடு வரை குறைத்துள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று எனவும் ஹார்ட்விக் தெரிவித்துள்ளார்.
Comments